Enable Javscript for better performance
உலகக் கோப்பையில் நியூஸிலாந்து முக்கியப் பங்கு வகிக்கும்: திராவிட்- Dinamani

சுடச்சுட

    

    உலகக் கோப்பையில் நியூஸிலாந்து முக்கியப் பங்கு வகிக்கும்: திராவிட்

    By dn  |   Published on : 28th January 2015 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகக் கோப்பை வெல்பவர்களுக்கான போட்டியில் நியூஸிலாந்து அணி முக்கியப் பங்கு வகிக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

    நியூஸிலாந்து அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் உலகக் கோப்பை வெல்லும் போட்டியாளர்களில் முக்கிய பங்கு வகிப்பர். நியூஸிலாந்து சிறிய நாடு. அந்நாட்டு மக்களும் தங்கள் அணி வெல்ல வேண்டும் என்று மட்டுமே விரும்புவர். நியூஸிலாந்து வீரர்கள் மீதான நெருக்கடியும் குறைவாகவே இருக்கும். நெருக்கடியான சமயத்தில் யாராவது ஒருவர் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த புதிய கண்டுபிடிப்பு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். அத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வீரரான பிரண்டன் மெக்கல்லத்தை நியூஸிலாந்து பெற்றுள்ளது.

    எந்த சிரமமும் இன்றி வேகமாகவும், புதுவிதமான ஷாட்களை அடிப்பதிலும் அவர் வல்லவர். அவர் ஒரு ஆட்டத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட வல்ல திறமை பெற்றவர். அதேபோல, டிம் செளதி போல இக்கட்டான நேரத்தில் யார்க்கர் வீசவல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதும் அந்த அணிக்கு பலம். உடற்தகுதியுடன் இருந்தால் உலகக் கோப்பையில் டேனியல் வெட்டோரி நிச்சயம் சிறந்த பங்களிப்பை அளிப்பார் என்றார் திராவிட்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai