Enable Javscript for better performance
தென்னிந்திய கூடைப்பந்து: வள்ளியூர், மதுரை அணிகள் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தென்னிந்திய கூடைப்பந்து: வள்ளியூர், மதுரை அணிகள் சாம்பியன்

    By dn  |   Published on : 28th January 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    foot_ball

    திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான தென்னிந்திய கூடைப்பந்து போட்டியில், ஜூனியர் பிரிவில் வள்ளியூர் கிங்ஸ் பள்ளி அணியும், சீனியர் பிரிவில் மதுரை எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.

    தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கிங்ஸ் பள்ளியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. 23 பள்ளிகளைச் சேர்ந்த 39 அணிகள் பங்கேற்றன.

    ஜூனியர் பிரிவு போட்டிகளில் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தாள் ஜோதி அரசு பள்ளி 2ஆம் இடத்தையும், திருநெல்வேலி ஸ்ரீஜயேந்திரா பொன் விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 3ஆவது இடத்தையும், வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 4ஆவது இடத்தையும் பெற்றன. கிங்ஸ் பள்ளி அணியைச் சேர்ந்த முகுந்த் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    சீனியர் பிரிவில் மதுரை எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளி அணி 2ஆம் இடத்தையும், கிங்ஸ் பள்ளி அணி 3ஆம் இடத்தையும், கேரள மாநிலம், இடுக்கி சாந்தா ஜோதி அரசு பள்ளி அணி 4ஆம் இடத்தையும் பெற்றன. தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆனந்தராஜ் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ்ராஜா, திருநெல்வேலி கூடைப்பந்து கழகத் தலைவர் ராஜமணி, கிங்ஸ் பள்ளித் தலைவர் காலின்வாக்ஸ்டாப், கிங்ஸ் பள்ளி முதல்வர் பப்ஸிபெர்சிஸ் ஆகியோர் ரொக்கப் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கிங்ஸ் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஜோசுவா, கூடைப்பந்து பயிற்சியாளர் ரவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai