Enable Javscript for better performance
தொடர் பாதியிலேயே முடிந்த விவகாரம்: மே.இ.தீவுகள் வாரியம் புது கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொடர் பாதியிலேயே முடிந்த விவகாரம்: மே.இ.தீவுகள் வாரியம் புது கோரிக்கை

    By dn  |   Published on : 28th January 2015 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய சுற்றுப் பயணத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய விவகாரம் குறித்து, இரு தரப்பு கிரிக்கெட் வாரியங்களும் நேரடியாகவோ அல்லது மத்தியஸ்தர் மூலமாகவோ பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ), மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (டபிள்யூஐசிபி) வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடரின் பாதியிலேயே வெளியேறியது. இதற்கு பிசிசிஐ தரப்பில் கோடிக் கணக்கில் இழப்பீடு கோரப்பட்டிருந்தது. சமீபத்தில், இழப்பீட்டை வழங்கவில்லை எனில் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன், கிரிக்இன்ஃபோ இணையதளத்துக்கு அளித்த பேட்டி:

    அடுத்த 60 நாள்களுக்குள் நாங்கள் இருவரும் (பிசிசிஐ, டபிள்யூஐசிபி) இணைந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயல வேண்டும். மத்தியஸ்தர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தவும் தயார். இந்திய நீதிமன்றங்களில் இந்த வழக்கை நடத்த விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, டேவ் கேம்ரூன் இந்த வாரத்துக்குள் ஐசிசி அதிகாரிகளைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஐசிசி இந்த பிரச்னையில் தலையிட்டு, இந்திய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai