Enable Javscript for better performance
பிப்ரவரி 16-இல் தில்லி ஓபன் டென்னிஸ்- Dinamani

சுடச்சுட

    

    இரண்டாவது தில்லி ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    இதில் நடப்பு சாம்பியனான சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஆகிய இந்திய வீரர்களும், தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் யுசி சுகிதா, தரவரிசையில் 120ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

    இந்திய வீரர் விஷ்ணு வர்தனுக்கு பிரதான சுற்றில் நுழவதற்கான வைல்ட் கார்ட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சித்தார்த் ராவத், விதித் வகீலா, பிரேரினா, கர்மன் கெளர் தாண்டி ஆகியோரும் தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்கான வைல்ட் கார்ட் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai