Enable Javscript for better performance
ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    
    steve

    சமீப காலமாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, இந்த ஆண்டுக்கான ஆலன் பார்டர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. சிறந்த டெஸ்ட், ஒரு நாள் வீரர் விருதுகளையும் அவரே தட்டிச் சென்றுள்ளார்.

    கடந்த 2000இல் இருந்து, கடந்த சீசனில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலிய வீரருக்கு ஆலன் பார்டர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை 243 வாக்குகளைப் பெற்று ஸ்டீவ் ஸ்மித், முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் கடந்த சீசனில் 22 போட்டிகளின் மூலம் 1756 ரன்கள் குவித்திருந்தார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், ஆதம் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ், மைக்கேல் கிளார்க் ஆகியோர் இந்த பதக்கத்தை வென்றுள்ளனர்.

    அதோடு, டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும், ஆரோன் ஃபின்ச்சை முந்தி ஒரு நாள் வீரர் விருதையும் வென்றார் ஸ்மித். மேக்ஸ்வெல் சிறந்த டி-20 வீரராகத் தேர்வானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai