Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன்: ராம்குமார் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.

    இரண்டாவது சுற்றில் அவர், வேகமாக சர்வ் வீசுவதில் வல்லவரான இந்திய வீரர் சாகேத் மைனேனியை எதிர்கொள்கிறார்.

    ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று புதன்கிழமை நடந்தது. இதில், 20 வயதாகும் ராம்குமார், தகுதிச் சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறிய சீனாவின் யான் பையை சந்தித்தார். முதல் செட்டை ராம்குமார் இழந்தார். 3-6, 6-4, 4-1 என்று ராம்குமார் முன்னிலையில் இருந்தபோது, யான் பை காயம் காரணமாக வெளியேறினார். இதனால், ராம்குமார் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற மற்றொரு இந்திய வீரர் சனம் சிங், இந்தோனேஷிய வீரர் கிறிஸ்டோபர் ரங்கட்டிடம் தோல்வியடைந்தார். ஆனால், இரட்டையர் பிரிவில் சனம் சிங், சாகேத் மைனேனி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பேப்ரிஸ் மார்டின், இந்தியாவின் பூரவ் ராஜ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai