Enable Javscript for better performance
ஹாங்காங் சேலஞ்சர்ஸ்: சாகேத் மைனேனி வெற்றி - Dinamani

சுடச்சுட

    
    Myneni

    ஹாங்காங் சேலஞ்சர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி, தரவரிசையில் 85ஆவது இடத்தில் உள்ள ரிச்சர்ட்ஸ் பெரங்கிûஸத் தோற்கடித்தார்.

    ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வேகமாக "சர்வ்' வீசுவதில் வல்லவரான மைனேனி, லிதுவேனியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்ஸ் பெரங்கிûஸ 7-6(1), 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், சக வீரரான யூகி பாம்ப்ரியை 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் போராடி தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், சீனாவைச் சேர்ந்த தகுதிச் சுற்று வீரர் யன் பெய் என்பவரை வீழ்த்தினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண், ஜெர்மனியின் ஃபிராங்க் மோசஸ் ஜோடி 7-5 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் லியாங் சி ஹுவாங், ஜப்பானின் யுசி சுகிதா ஜோடியை வென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai