Enable Javscript for better performance
ஜிம்பாப்வேயை அடக்கியது அயர்லாந்து- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வேயை அடக்கியது அயர்லாந்து

    By dn  |   Published on : 07th March 2015 11:29 PM  |   அ+அ அ-   |    |  

    ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

    பி பிரிவில் உள்ள இந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் ஹோபார்ட் நகரில் சனிக்கிழமை நடந்தது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் சேர்த்தது. இதுவே, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அயர்லாந்து அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர்.

    அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களான வில்லியம் போர்ட்டர்பீல்டு (கேப்டன்), பால் ஸ்டிர்லிங் ஆகியோர் முறையே 29, 10 ரன்களில் ஆட்டமிழந்த போதும், எட் ஜாய்ஸ், ஆன்ட்ரூ பால்பிர்னி ஆகியோர் வெளுத்து வாங்கினார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 18.3 ஓவர்களில் 138 ரன்கள் சேர்த்தது. அபாரமாக ஆடிய எட் ஜாய்ஸ் 112 ரன்கள் சேர்த்தார். அவர் 103 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களின் உதவியுடன் இந்த இலக்கை எட்டினார்.

    துரதிருஷ்டவசமாக பால்பிர்னி 97 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனதால் சதம் நழுவியது. அதன் பின் கெவின் ஓ' பிரையன் 24 ரன்களும், காரி வில்சன் 25 ரன்களும், ஜான் மூனி 10 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தனர்.

    இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கேப்டன் பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய டெய்லர் 121 ரன்கள் சேர்த்தார். அவர் 91 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்களின் உதவியுடன் இந்த இலக்கை அடைந்தார். ஆனால், சீன் வில்லியம்ஸ் 96 ரன்களில் ஆட்டமிழந்ததால் சதம் நழுவியது.

    கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அயர்லாந்தின் அலெக்ஸ் கியூசெக் பந்து வீசினார். முதல் பந்தில் ரெஜிஸ் சகப்வா (17 ரன்கள்) ஆட்டமிழக்க, 3-ஆவது பந்தில் டவாண்டா முபாரிவா (18 ரன்கள்) வில்லியம் போர்ட்டர்ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்தார். இதனால், அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக எட் ஜாய்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     

     

    சுருக்கமான ஸ்கோர்

     

    அயர்லாந்து 331/8 (50 ஓவர்கள்)

    எட் ஜாய்ஸ் 112 (103)

    பால்பிர்னி 97 (79)

    டெண்டாய் சடாரா 3வி/61 ரன்

    ஜிம்பாப்வே 326 (49.3 ஓவர்கள்)

    பிரென்டன் டெய்லர் 121 (91)

    சீன் வில்லியம்ஸ் 96 (83)

    அலெக்ஸ் கியூசெக் 4வி/32ரன்

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp