Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் பாடம்- Dinamani

சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் பாடம்

    By dn  |   Published on : 07th March 2015 11:29 PM  |   அ+அ அ-   |    |  

    dev

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

    பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா

    ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    பாகிஸ்தானின் தொடக்க வீரர் அகமது ஷெசாத் 18 ரன்களில் வெளியேற, 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சர்பிராஸ் அகமது, யூனிஸ் கான் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பரான சர்பிராஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரை சத வாய்ப்பை நழுவ விட்டார். 37 ரன்கள் சேர்த்திருந்த யூனிஸ்கான் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

    அதன்பின் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா பொறுப்புடன் ஆடினார். அவர் யூனிஸ், அப்ரிடி ஆகியோருடன் இணைந்து ரன் ரேட்டை உயர்த்தினார். ஆனால் உமர் அக்மல், சோகைப் மக்சூத் சொற்ப ரன்களில் வெறியேறினர். பொறுமையாக ஆடிய மிஸ்பா அரைசதம் கடந்து முன்னேறினார். 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி மிரட்டிய அப்ரிடியை வேகப்புயல் ஸ்டெயின் பெவிலியன் அனுப்பி வைத்தார். பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 37, 41-ஆவது ஓவர்களில் இரண்டு முறை மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது. மழை காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடிய மிஸ்பா, ஒரு நாள் அரங்கில் 5,000 ரன்களைக் கடந்தார். இருப்பினும், 56 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்வரிசை வீரர்களான வஹாப் ரியாஸ், சோஹைல் கான், ராஹத் அலி, முகமது இர்பான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் சேர்த்தது.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே தொடக்க வீரர் குவின்டன் டி காக், விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். மூன்றாவது வீரராக இறங்கிய டூ பிளெஸ்ஸிஸ் ஒரு முறை ரன் அவுட்டில் இருந்து கண்டம் தப்பினர். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், ஹஷிம் ஆம்லாவுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரும் 2-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் ராஹத் அலி வீசிய பந்தில் சர்பிராஸிடம் கேட்ச் கொடுத்து டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டமிழக்க, அந்த நிமிடத்தில் இருந்து ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்த இரண்டு ஓவர்களில் ஆம்லாவும் சர்பிராஸிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

    அடுத்து வந்த ரில்லி ருசெள, டேவிட் மில்லர் வந்த வேகத்தில் திரும்ப, தென் ஆப்பிரிக்கா 77 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜேபி டுமினி, டி வில்லியர்ஸ் ஜோடி சிறிது நேரம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடியது. ஆனாலும், இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முகமது இர்பான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக கணிக்கத் தவறிய டுமினி, வஹாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்தார். அதன்பின் ஸ்டெயின், அபோட் இருவரும் சிறிது நேரம் டி வில்லியர்ஸýக்கு உதவியாக இருந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், டி வில்லியர்ஸின் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. இருந்தாலும், சோஹைல் கான் பந்தை இறங்கி அடிக்க நினைத்தபோது, சர்பிராஸிடம் கேட்ச் கொடுத்து டி வில்லியர்ஸ் நடையைக் கட்ட, மிச்ச மீதமிருந்த தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் நம்பிக்கையும் சிதைந்தது. தென் ஆப்பிரிக்க அணி 33.3 ஓவர்களில் 202 ரன்களில் சுருண்டது.

     

    இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். 100 சதவீத அர்ப்பணிப்புடன் ஆடவில்லை என கருதுகிறேன். இரண்டு அல்லது மூன்றாவது கியரில் ஒரு கார் திணறிக் கொண்டிருப்பதைப் போல நாங்கள் திணறினோம். எங்கள் வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தனி ஆளாக என்னால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. அணியினரின் ஒத்துழைப்பு தேவை'' டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க கேப்டன்.

     

    ஸ்கோர் போர்டு


    பாகிஸ்தான்     ரன்    பந்து

     

    சர்பிராஸ் அகமது ரன் அவுட் (மில்லர்/ டி காக்) 49 49

    அகமது ஷெசாத் (சி) ஸ்டெயின் (பி) அபோட் 18 30

    யூனிஸ் கான் (சி) ரில்லி ருசெள (பி) டி வில்லியர்ஸ் 37 44

    மிஸ்பா உல் ஹக் (சி) மோர்கெல் (பி) ஸ்டெயின் 56 86

    சோஹைப் மக்சூத் (சி) ருசெள (பி) அபோட் 8 16

    உமர் அக்மல் (சி) டி வில்லியர்ஸ் (பி) மோர்கெல் 13 20

    ஷாஹித் அப்ரிடி (சி) டுமினி (பி) ஸ்டெயின் 22 15

    வஹாப் ரியாஸ் (எல்பிடபுள்யூ) இம்ரான் தாஹிர் 0 1

    சோஹைல் கான் (சி) டுமினி (பி) மோர்கெல் 3 11

    ராஹத் அலி (சி) இம்ரான் தாஹிர் (பி) ஸ்டெயின் 1 6

    முகமது இர்பான் நாட் அவுட் 1 3

    உபரிகள் 14

    மொத்தம் (46.4 ஓவர்கள், ஆல் அவுட்) 222

     

    விக்கெட் வீழ்ச்சி: 1-30 (அஹமது ஷெசாத்), 2-92 (சர்பிராஸ் அகமது), 3-132 (யூனிஸ் கான்), 4-156 (சோஹைப் மக்சூத்), 5-175 (உமர் அக்மல்), 6-212 (ஷாஹித் அப்ரிடி), 7-212 (வஹாப் ரியாஸ்), 8 -218 (மிஸ்பா உல் ஹக்), 9-221 (ராஹத் அலி), 10-222 (சோஹைல் கான்).

     

    பந்து வீச்சு
     

    ஸ்டெயின் 10 3 30 3

    அபோட் 9 0 45 2

    மோர்கெல் 9.4 0 25 2

    இம்ரான் தாஹிர் 9 1 38 1

    டி வில்லியர்ஸ் 6 0 43 1

    டுமினி 3 0 34 0

     

    தென் ஆப்பிரிக்கா    ரன்        பந்து

     

    குவின்டன் டி காக் (சி) சர்பிராஸ் (பி) முகமது இர்பான் 0 2

    ஹசிம் ஆம்லா (சி) சர்பிராஸ் (பி) வஹாப் ரியாஸ் 38 27

    டூ பிளெஸ்ஸிஸ் (சி) சர்பிராஸ் (பி) ராஹத் அலி 27 29

    ரில்லி ருசெள (தி) சோஹைல் கான் (பி) வஹாப் ரியாஸ் 6 9

    டி வில்லியர்ஸ் (சி) சர்பிராஸ் (பி) சோஹைல் கான் 77 58

    டேவிட் மில்லர் எல்பிடபுள்யூ (பி) ராஹத் அலி 0 13

    ஜேபி டுமினி (சி) வஹாப் ரியாஸ் (பி) முகமது இர்பான் 12 13

    ஸ்டெயின் (சி) சர்பிராஸ் (பி) முகமது இர்பான் 16 17

    அபோட் (சி) யூனிஸ் கான் (பி) ராஹத் அலி 12 19

    மோர்கெல் நாட் அவுட் 6 8

    இம்ரான் தாஹிர் (சி) சர்பிராஸ் அகமது (பி) வஹாப் ரியாஸ் 0 6

    உபரிகள் 8

    மொத்தம் (ஆல் அவுட், 33.3 ஓவர்கள்) 202

     

    விக்கெட் வீழ்ச்சி: 1-0 (டி காக்), 2-67 (டூ பிளெஸ்ஸிஸ்), 3-67 (ஹஷிம் ஆம்லா), 4-74 ரில்லி ரூசெள, 5-77 (மில்லர்), 6-102 (டுமினி), 7-138 (ஸ்டெயின்), 8-172 (அபோட்), 9-200 (டி வில்லியர்ஸ்), 10-202 (இம்ரான் தாஹிர்)

     

    பந்து வீச்சு

     

    முகமது இர்பான் 8 0 52 3

    சோஹைல் கான் 5 0 36 1

    ராஹத் அலி 8 1 40 3

    அப்ரிடி 5 0 28 0

    வஹாப் ரியாஸ் 7.3 2 45 3

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp