Enable Javscript for better performance
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

    By  புது தில்லி,  |   Published on : 01st October 2015 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 தங்கம் உள்பட மொத்தம் 17 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.
     8-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி புது தில்லியில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான "10 மீட்டர் ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து (197.8) தங்கம் வென்றார்.
     மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்வேதா சர்மா (197) வெள்ளிப் பதக்கத்தையும், கொரியாவின் சீயோன் கிம் (175.8) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை யஷாஸ்வினி சிங் தேஸ்வால் (155.3) 4-ஆவது இடம் பெற்றார். இது அவருக்கு முதல் சர்வதேச போட்டியாகும்.
     இந்தியா முதலிடம்: மகளிர் ஜூனியருக்கான "10 மீட்டர் ஏர் பிஸ்டல்' பிரிவில் நிவேதா ஸ்ரீ பரமானந்தம், கெளிரி ஷியோரன், ஸ்ரேயா காவன்டே ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
     இளையோர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷதா நிதேவி வெண்கலம் வென்றார். இதே பிரிவின் அணிகளுக்கான போட்டியில் அவர், மலைகா கோயல், நயனி பரத்வாஜ் ஆகியோருடன் இணைந்து தங்கத்தை வென்றார்.
     மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனா, ஸ்வேதா, யஷாஸ்வினி ஆகியோரை கொண்ட இந்திய அணி தங்கம் வென்றது.
     புதன்கிழமையுடன் நிறைவடைந்த இந்தத் தொடரில் இந்தியா 17 பதக்கங்களுடன் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) முதலிடத்தையும், 6 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலம் என 12 பதக்கங்களுடன் ஈரான் 2-ஆவது இடத்தையும் பெற்றன. ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஏராளமான வெண்கலப் பதக்கங்களுடன் சீன தைபே 3-ஆவது இடத்தையும் பெற்றன.
     திருப்தி இல்லை: இறுதிச் சுற்றில் தங்கம் வென்றாலும் தனது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று ஹீனா சித்து தெரிவித்தார்.
     இதுதொடர்பாக அவர் கூறுகையில், "போட்டியின் போது நிறைய நேரம் தாமதித்தேன். நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டேன். இறுதிச் சுற்றில் எனது செயல்பாட்டில் திருப்தி இல்லை' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai