சுடச்சுட

    

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகளை வெளியேற்றி வாய்ப்பைப் பெற்றது வங்கதேசம்

    By  துபை,  |   Published on : 01st October 2015 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் 2017ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது வங்கதேச அணி.
     2017 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கடந்த 1998 ஆண்டில் (அப்போது மினி உலகக் கோப்பை) இருந்து இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது.
     2015, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்றுள்ள அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
     அதன்படி, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.
     இந்த ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு நாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் 9-ஆவது இடத்திலிருந்த வங்கதேச அணி (96 புள்ளிகள்) 7-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
     மேற்கிந்தியத் தீவுகளை விட (88 புள்ளிகள்) 2 புள்ளிகள் கூடுதலாக உள்ள பாகிஸ்தான் (90 புள்ளிகள்) அணியும், வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. வங்கதேச அணியின் திடீர் எழுச்சியால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
     சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடவுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். மொத்தம் 15 ஆட்டங்கள் நடத்தப்படும். இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
     புதன்கிழமை (செப்.30) நிலவரப்படி ஐசிசி-யின் ஒரு நாள் போட்டி தரவரிசை:


     33.jpg

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai