சுடச்சுட

  

  டி-20 தரவரிசை: முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள்

  By  துபை,  |   Published on : 01st October 2015 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  17

  டி-20 தரவரிசையில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் 3 போட்டி கொண்ட தொடரை எதிர்நோக்கி உள்ளன.
   இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளன.
   இதில், டி-20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
   இந்த தொடருக்கு தயாராகும் விதமாகவும், ஐசிசி டி-20 தரவரிசையில் முன்னேற்றத்தை காணும் விதமாகவும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உள்ளன.
   தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள இந்திய அணி (118 புள்ளிகள்), 6-ஆவது இடத்திலுள்ள தென் ஆப்பிரிக்காவை (111 புள்ளிகள்) விட 7 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளது.
   ஏற்ற, இறக்கம்: இவ்விரு அணிகளிடையே வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முடிவைப் பொருத்து இதில் ஏற்ற, இறக்கம் உண்டாகலாம். இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றமடையும்.
   ஒருவேளை இத்தொடரில் அணிகளின் ரேட்டிங் புள்ளிகள் தசம அடிப்படையில் கணக்கிடப்படுமானால், இலங்கை (126 புள்ளிகள்) அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் இந்திய அணிக்கு கிடைக்கலாம்.
   அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் வெல்லும்பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் (4-ஆவது இடம்) அணியைப் போல் 117 தரவரிசைப் புள்ளிகளைப் பெறும். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு 5-ஆவது இடமே கிடைக்கும்.
   இந்த நிலை உருவானால் இந்திய அணி 8-ஆவது இடத்துக்கு தள்ளப்படும்.
   மாறாக 2-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றினால், ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி 3-ஆவது இடத்தைப் பிடிக்கும். தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்துக்கு முன்னேறும். அண்மையில் முடிந்த ஜிம்பாப்வே - பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டிகளின் முடிவில் வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
   முன்னிலையில் அஸ்வின்: இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 2-ஆவது இடத்திலும் தொடர்கின்றனர். 4-ஆவது இடத்திலுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் டி-20 கேப்டன் பாப் டுபிளெஸ்ஸிஸ் வரவிருக்கும் தொடர் மூலமாக முன்னேற்றம் காணும் முனைப்பில் உள்ளார். அந்த அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் (3-ஆவது இடம்) முன்னிலையில் உள்ள வீரராவார்.
   இதேபோல சுரேஷ் ரெய்னா (11), ஜே.பி.டுமினி (16), குவின்டன் டி காக் (22), ஹஷிம் ஆம்லா (24), டேவிட் மில்லர் (31), இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி (33), டி வில்லியர்ஸ் (39) ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
   டி-20 பந்துவீச்சாளர்களில் இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் (4-ஆவது இடம்) முன்னிலையில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் 12-ஆவது இடத்திலுள்ள இம்ரான் தாஹிரே முன்னிலையில் உள்ளார்.
   இவர்களுடன் புவனேஷ்வர் குமார் (35), கைல் அபோட் (44), ஹர்பஜன் சிங் (49), டுமினி (60) ஆகியோரும் இந்தத் தொடரின் மூலம் தரவரிசையில் சிறப்பான இடத்தைப் பெற
   காத்திருக்கின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai