சுடச்சுட

  

  தென் மண்டல இறகுப்பந்துப் போட்டி: ஆந்திரம், கர்நாடக அணிகள் வெற்றி

  By புதுச்சேரி,  |   Published on : 01st October 2015 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  19

  புதுச்சேரியில் தொடங்கிய தென் மண்டல இறகுப்பந்து போட்டியின் முதல்நாளில் ஆந்திரம், கர்நாடக அணிகள் வெற்றி பெற்றன.
   புதுச்சேரி இறகுப் பந்து கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டிகளை, உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
   ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டப் பிறகு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி மாநில அணிகளைச் சேர்ந்த 150 வீரர்கள் கலந்து கொண்டு தனி நபர் போட்டியிலும், குழுப் போட்டியிலும் பங்கேற்கின்றனர்.
   வரும் 3ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் 15 முதல் 20 சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளைத் தொடங்கி வைத்து முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாவது:
   புதுச்சேரி விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. தேசியப் போட்டிகள் நடத்தவும் மாநில அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
   தேசியச் செயலர் சி.புன்னையா செüத்ரி, புதுவை மாநில இறகுப் பந்து கழகத் தலைவர் ஜே.அரவிந்தன், துணைத் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., செயலர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   தொடக்க நாள் போட்டி முடிவுகள்:
   குழுப் போட்டிகள் (ஜூனியர்)
   ஆந்திர பிரதேசம் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகத்தை வென்றது.
   பி.சோனியா சாய்- எஸ்கே.கெüஸ் (ஆந்திரம்) இணை, 21-17, 21-13 என பி.தனுஸ்குமார்-எஸ்.கேசம்மா இணையை வென்றது.
   ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கே.ஜெகதீஷ் (ஆந்திரம்) 21-15, 21-10 என டிடி.ஹர்சத்தை (தமிழகம்) வென்றார்.
   பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய் உஜ்ஜிதா ராவ் (ஆந்திரம்) 21-9, 21-13 என அஸ்வினி காந்திமதியை (தமிழகம்) வென்றார்.
   கர்நாடக அணி 3-1 என்ற கணக்கில் புதுச்சேரியை வென்றது.
   ஆண்கள் ஒற்றையர்: சஞ்சய்ஸ்ரீவத்சவா (புதுவை) 21-19, 21-18 என டேனியர் பரீத்தை (கர்நாடகம்) வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷில்கா கெüதம் (கர்நாடகம்) 21-12, 21-14 என சுவேதாவை (புதுவை) வென்றார்.
   ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாகில் சிப்பானி-சுதிப் சுரேஷ் (கர்நாடகம்) 21-15, 24-26, 22-20 என சஞ்சய் ஸ்ரீவத்சவா-ஸ்ரீபாலாஜி (புதுவை) வென்றது.
   பெண்கள் இரட்டையரில் மகிமா அகர்வால்-ஷில்கா கெüதம் (கர்நாடகம்) இணை, 21-15, 21-15 என கணக்கில் எஸ்.கவிப்பிரியா-சுவேதா (புதுவை) இணையை வென்றது.
   குழுப் போட்டிகள் (சீனியர்): கர்நாடகம் 3-0 என புதுச்சேரியை வென்றது.
   ஆண்கள் ஒற்றையர்-ஹேமந்த் கெüடா (கர்நாடகம்) 21-16, 21-9 என மகேந்திரவர்மன் (புதுவை) வென்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai