சுடச்சுட

  

  மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி: கோவை மகளிர் அணி சாம்பியன்

  By  ஈரோடு,  |   Published on : 01st October 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு பிவிபி பள்ளியில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோவை மகளிர் அணி சாமóபியன் பட்டம் வென்றது.
   புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில், ஆடவர் பிரிவில் 30 அணிகளும், மகளிர் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றன.
   ஆடவர் பிரிவுக்கான முதல் காலிறுதிப் போட்டியில் கோவை அணி, விழுப்புரம் அணியை 25-14, 30-18, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
   இரண்டாவது காலிறுதியில் சென்னை அணி, தூத்துக்குடி அணியை 25-19, 25-18, 25-19 என்ற நேர் செட்டில் வீழ்த்தியது. மற்ற போட்டிகளில் திருநெல்வேலி அணி புதுக்கோட்டை அணியையும், திருவாரூர் அணி, மதுரை அணியையும் போராடி வென்றது.
   மகளிருக்கான முதல் காலிறுதி ஆட்டத்தில் சென்னை அணி, நாகப்பட்டினம் அணியை 25-22, 25-19, 25-5 என்ற ஸ்கோரில் வென்றது.
   இரண்டாவது காலிறுதியில் கோவை அணி, விருதுநகர் அணியை 24-26, 25-23, 17-25, 25-09, 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
   மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் திருச்சி அணி திருப்பூர் அணியை 25-21, 25-08, 25-11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. சேலம் அணி, காஞ்சிபுரம் அணியை 25-23, 25-05, 25-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
   தொடர்ந்து நடைபெற்ற அடுத்த சுற்று போட்டிகளில் மகளிர் பிரிவில், கோவை அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ஆம் இடத்தையும், சேலம் அணி 3-ஆம் இடத்தையும், திருச்சி அணி 4-ஆம் இடத்தையும் பெற்றன.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai