சுடச்சுட

    

    உஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி

    By உஹான்,  |   Published on : 02nd October 2015 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.
     உஹான் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, அமெரிக்காவின் ராக்யூவல் கோப்ஸ் ஜோன்ஸ் - அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
     இந்த ஆட்டத்தின் முடிவில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி கண்டு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக, முதல் சுற்றில் சானியா ஜோடி "பை' பெற்றது.
     அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, கிளாவ்டியா ஜான்ஸ் (போலந்து) - அனஸ்டாசியா ராடியோனோவா (ரஷியா) ஜோடியை 6-3, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தது.
     இந்த ஆண்டில் விம்பிள்டன், யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை சானியா - ஹிங்கிஸ் வெற்றிக் கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai