Enable Javscript for better performance
துளிகள்...!- Dinamani

சுடச்சுட

    

     * ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே, 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
     * தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என்.சீனிவாசன், அந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என்று அறிவிக்கக் கோரி, பிகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல்
     செய்துள்ளார்.
     * சீனாவில் நடைபெற்று வரும் 28-ஆவது (எஃப்ஐபிஏ) ஆசிய கூடைப்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவிடம் 58-104 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
     * அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் தடுப்பாட்டக்காரர் ஜோஸ் மிகுயல் கன்ஜாலெஸ் காயம் காரணமாக சென்னைக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
     * ஐபிஎஸ்எஃப் சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
     * 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் வங்கதேச மகளிர் அணியை (2-0) வீழ்த்தி, பாகிஸ்தான் மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai