சுடச்சுட

    

    பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 125 ரன்கள் எடுத்தது.
     தமிழகம் - பரோடா அணிகளிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழக அணி, 57.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 44 ரன்களும், பரத் சங்கர் 28 ரன்களும் எடுத்தனர். பார்கவ் பத், யூசுஃப் பதான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர், பேட்டிங் செய்த பரோடா அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. கேதார் தேவ்தர் 17 ரன்களுடனும், ஆதித்யா வாக்மோட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai