சுடச்சுட

  

  வங்கதேச சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா

  By மெல்போர்ன்,  |   Published on : 02nd October 2015 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய அணி ஒத்திவைத்தது.
   வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாட முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வீரர்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி அங்கு செல்வதில் ஆஸ்திரேலிய அணி தயக்கம் காட்டியது. அட்டவணைப்படி கடந்த திங்கள்கிழமையே ஆஸ்திரேலிய அணி அந்நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai