Enable Javscript for better performance
வருவாய் 2 மடங்காக அதிகரிப்பு: உற்சாகத்தில் ஐஎஸ்எல் அணி உரிமையாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய் 2 மடங்காக அதிகரிப்பு: உற்சாகத்தில் ஐஎஸ்எல் அணி உரிமையாளர்கள்

    By  புது தில்லி,  |   Published on : 02nd October 2015 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த ஆண்டை விட வருவாய் 2 மடங்காக அதிகரித்துள்ளதால் ஐஎஸ்எல் அணி உரிமையாளர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
     8 அணிகள் பங்கேற்கும் இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி சென்னைநேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா - சென்னையின் எஃப்சி அணி மோதுகிறது. இந்தத் தொடரில் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்ட வீரர்களே அணிகளில் இடம்பெற்றுள்ளனர். உலகில் அதிக ரசிகர்கள் கண்டுகளிக்கும் 4-ஆவது போட்டி என்ற பெருமையை ஐஎஸ்எல் தொடர் பெற்றுள்ளது. இதனால் இப்போட்டிக்கு வணிக நிறுவனங்கள் (ஸ்பான்ஸர்ஷிப்) மிகுந்த ஆதரவு காட்டுகின்றன. இதனால், ஐஎஸ்எல் அணி உரிமையாளர்களின் வருவாய் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐஎஸ்எல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ரூ.55 கோடி கிடைத்தது. இந்த முறை இரண்டு மடங்காக ரூ.100 கோடியை எட்டியுள்ளது. வணிக நிறுவனங்கள், ஐஎஸ்எல் போட்டிக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது' என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai