காந்தி - மண்டேலா உருவம் பொறித்த நாணயத்தில் "டாஸ்'
By தர்மசாலா, | Published on : 03rd October 2015 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மகாத்மா காந்தியின் 146-ஆவது பிறந்தநாள் நினைவாக "காந்தி - மண்டேலா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் காந்தி, மண்டேலா ஆகியோரது உருவம் பொறித்த தங்க நாணயம் "டாஸ்' போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. முன்னதாக இந்த நாணயத்தை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்குர் வெளியிட்டார்.
அப்போது இரு அணிகளின் கேப்டன்களான மகேந்திர சிங் தோனி, ஃபாப் டுபிளெஸ்ஸிஸ் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து தாக்குர் கூறுகையில்,
"காந்திஜியின் 146-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். அஹிம்சையின் வழியாக சுதந்திரத்தை அடைய முடியும் என்பதை காந்தியும், மண்டேலாவும் உலகுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர்' என்றார்.