சுடச்சுட

  

  இரண்டாவது ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் போட்டி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.

  இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  இந்நிலையில், இரண்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக தொடங்கியது.

  தொடக்க நிகழ்ச்சியில், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஐஎஸ்எல் நிர்வாகி நீட்டா அம்பானி, சென்னையின் எப்சி அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

  நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை அலியா பட்டின் குழுவினரின் கண்கவர் நடன ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதன்பின்னர் எந்திரன் உள்ளிட்ட ஹிட் படங்களின் பாடல் வரிகளுக்கு ஐஸ்வர்யா ராய் நடனமாடி அசத்தினார்.

  கொல்கத்தா, சென்னை, டெல்லி டைனமோஸ், புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை எப் சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டட், எப்.சி கோவா ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் அல்டெடிகோ டி கொல்கத்தா அணியை சந்திக்கிறது. டிசம்பர் வருகிற 20 ஆம் தேதி வரை போட்டி நடக்கிறது.

  இந்தபோட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai