Enable Javscript for better performance
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

    By ஆக்லாந்து,  |   Published on : 03rd October 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கித் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.
     நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய ஹாக்கி அணி, 6 போட்டிகள் கொண்ட டெஸட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இரண்டு போட்டிகள் நியூஸிலாந்து "ஏ' அணியுடனும், அடுத்த 4 போட்டிகள் நியூஸிலாந்து பிரதான அணியுடனும் விளையாடவுள்ளது.
     இவ்விரு அணிகளிடையிலான முதல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் சிங் (3-ஆவது நிமிடம்), ரமன்தீப் சிங் (20-ஆவது நிமிடம்), நிகின் திம்மையா (26-ஆவது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர்.
     எதிரணி தரப்பில் 36-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின்னர், இரு அணிகளிலும் கூடுதலாக கோல் எதுவும் விழவில்லை. முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai