Enable Javscript for better performance
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் லிண்ட்ஸை கிளைன் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் லிண்ட்ஸை கிளைன் மரணம்

    By சிட்னி  |   Published on : 04th October 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kline

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் லிண்டஐ கிளைன் (81) வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இடது கை சுழற்பந்து வீச்சாளரான க்ளைன், கடந்த 1957ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார்.

    தான் ஆடிய 88 ஆட்டங்களில் மொத்தம் 276 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் க்ளைன்.

    டிரா ஆன முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ளைன் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 1960-61 காலகட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்தார் கிளைன். இதில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் க்ளைனும், அவரது பார்ட்னர் இயான் மெக்கிஃபும் பேட்டிங்கில் இருந்தனர். அப்போது கிளைன் ஒரு ஷாட் அடித்து, ரன் எடுக்க ஓடினார். மறுபக்கத்தில் தடுமாறிய மெக்கிஃபை ரன் அவுட்டாக்கினார் மேற்கிந்திய அணி வீரர் ஜோ சாலமன். இதனால் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai