Enable Javscript for better performance
உஹான் ஓபன்: பட்டம் வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி- Dinamani

சுடச்சுட

    
    saniya

    சீனாவில் நடைபெற்ற உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது சானியா மிர்ஸா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி.

    இது, இந்தியாவின் சானியா மிர்ஸாவும், சுவிட்ஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸும் இணைந்து வெல்லும் 7ஆவது பட்டமாகும்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீன தைபேயின் ஹாவ் சிங் சான்-யுங் ஜான் சான் ஜோடியை எதிர்கொண்டது சானியா-ஹிங்கிஸ் இணை.

    சுமார் 53 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஹாவ் சிங் சான்-யுங் ஜான் சான் ஜோடியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

    இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ருமேனியா நாட்டின் இரீனா கமெலினா பெகு-மோனிகா நிகுலெஸ்கு இணையை எதிர்கொண்டனர் சானியாவும், ஹிங்கிஸும்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி. தொடர்ந்து, இதே இணை சீன ஓபனில் பங்கேற்க உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai