Enable Javscript for better performance
தேசிய ஹாக்கி: ராஜஸ்தான், மேற்கு உ.பி. அணியினர் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஹாக்கி: ராஜஸ்தான், மேற்கு உ.பி. அணியினர் சாம்பியன்

    By கோவில்பட்டி  |   Published on : 04th October 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vidhya-bharathi

    கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில் மாணவர்கள் பிரிவில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச அணியினர் முதல் பரிசைப் பெற்றனர்.

    அகில இந்திய பாரதி பள்ளிகளுக்கிடையே 2 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    இப் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. மாணவிகளுக்கான பிரிவில் இரு அணிகள் பங்கேற்றன.

    இறுதிப் போட்டியில், புள்ளிகள் அடிப்படையில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியினர் முதல் பரிசு, மேற்கு உத்தரப் பிரதேச அணியினர் 2 ஆவது பரிசையும் பெற்றனர். 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் பரிசை மேற்கு உத்தரப் பிரதேச அணியும், 2 ஆவது பரிசை ராஜஸ்தான் அணியும் பெற்றது.

    19 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் மேற்கு உத்தரப் பிரதேச அணியினர் முதல் பரிசும், கிழக்கு உத்தரப் பிரதேச அணியினர் 2 ஆவது பரிசும் பெற்றனர்.

    மாணவிகளுக்கான போட்டியில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

    பரிசளிப்பு விழா: மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வித்ய பாரதி தக்ஷினா மாநிலத் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.

    நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

    விழாவில், தென் பாரத செயலர் ராஜகோபால், வித்ய பாரதியின் தென் தமிழ்நாடு செயலர் வேங்கட சுப்பிரமணியன், மாநில விளையாட்டு பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமையில் உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai