சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி:இந்தியாவுக்கு 2ஆவது வெற்றி

  By ஆக்லாந்து  |   Published on : 04th October 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரில் இந்திய அணி இரண்டாவது வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.

  முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல் பாதியில் இரு அணிகளும் சமமான ஆக்ரோஷத்துடன் மோதின.

  இதில், ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் அணியின் முதல் கோலுக்கு வழி வகுத்தார் எஸ்.வி.சுனில். தனக்கு கிடைத்த பந்தை நிகின் திம்மையாவிடம் அவர் பாஸ் செய்தார். நிகின் அதை உத்தப்பாவிடம் அளிக்க, இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார் உத்தப்பா. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் கோல் முயற்சிகளைத் தடுப்பதிலேயே நியூஸிலாந்து அணியினரின் நேரம் முழுவதும் விரயமானது. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

  இரண்டாவது பாதியில், இந்தியாவுக்கான இரண்டாவது கோலையும் அடித்தார் உத்தப்பா. இதனிடையே, பெனால்டி மூலம் கிடைத்த ஒரு வாய்பை இந்திய அணி தவறவிட்டது. அதேபோல், நியூஸிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற விடாமல் தடுத்தார் இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜேஷ்.

  எனினும், ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கான முதல் கோலை அடித்தார் அந்த அணியின் ஸ்டீபன் ஜென்னஸ். அதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி. நியூஸிலாந்துடனான இந்திய அணியின் 3ஆவது ஆட்டம், வரும் 6ஆம் தேதி நெல்சனில் நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai