சுடச்சுட

  

  விளையாட்டு பல்கலை.யை மேம்படுத்த விரைவில் நிதி :யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தகவல்

  By தாம்பரம்  |   Published on : 04th October 2015 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TAMB

  தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.

  தேசிய அளவிலான ஆசிரியர் கல்வி பாடத் திட்ட ஆய்வு குறித்த பயிலரங்கம் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கிவைத்து, தேவராஜ் பேசியதாவது:

  நாட்டில் கல்வித் துறையை முதன்மை மாநிலமாக்கும் நோக்கில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழகங்களை உருவாக்கிய முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்குரியவர். இதை

  மற்ற மாநிலங்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.

  12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, உடற்கல்வி, யோகா, விளையாட்டு ஆகிய துறைகளுக்கு உயர் கல்வி, ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்தத் தேவையான நிதியை பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்படும்.

  95 ஆண்டுகளாக உடற்கல்வியை பயிற்றுவிக்கும் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி சிறப்பு நிலை அந்தஸ்து பெறும் தகுதியுடன் உள்ளது.

  இதற்கு பல்கலைக்கழக மானியக் குழு உதவ தயாராக உள்ளது என்றார்.

  விழாவில் தமிழ்நாடு விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜன் பேசியதாவது:

  கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக ரூ. 572 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

  சர்வதேசத் தரத்துடன் நேரு விளையாட்டு அரங்கம், வேளச்சேரியில் நீச்சல் குளம், நுங்கம்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் அரங்கம் ஆகியவற்றை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

  சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது என்றார்.

  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா, துணைவேந்தர்கள் ஜட்டின் சோனி (குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகம்), திலீப் (குவாலியர் பல்கலைக்கழகம்), ஆர்.தாண்டவன் (சென்னைப் பல்கலைக்கழகம்), ஏ.எம்.மூர்த்தி (தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகம்), தமிழ்நாடு விளையாட்டு ஆணையரகத்தின் உதவி இயக்குநர் எம்.ஜெகதீஷ், ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத் தலைவர் சாம் செரியன், வழக்குரைஞர் பி.ஆர்.கோபிநாதன், ஹாக்கி விளையாட்டு வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai