Enable Javscript for better performance
உச்ச நீதிமன்றத்தில் என். சீனிவாசன் தொடர்பான மனுவை வாபஸ் பெற்றது பிசிசிஐ!- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத்தில் என். சீனிவாசன் தொடர்பான மனுவை வாபஸ் பெற்றது பிசிசிஐ!

    By DN  |   Published on : 05th October 2015 03:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் கலந்து கொள்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பிசிசிஐ திரும்பப் பெற்றுக்கொண்டது.

    2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தி முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.

    சிலவாரங்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐபிஎல் செயற்குழு அறிக்கை அளிப்பதாக இருந்தது. இரு அணிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க இருந்தது பிசிசிஐ. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதற்கு பிசிசிஐ உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சீனிவாசன் கலந்துகொள்வது பற்றி சட்டரீதியான தெளிவு இல்லாததால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்கூட்டங்களில், முன்னாள் தலைவர் சீனிவாசன் பங்கேற்கலாமா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி, பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

    அப்போது என். சீனிவாசன் தொடர்பான இரட்டை ஆதாயம் குறித்து பிசிசிஐயே முடிவெடுக்கவேண்டும். உச்ச நீதிமன்றத்தால் இந்த வழக்கை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கமுடியாது என்று உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்தது. எனவே தன் மனுவை பிசிசிஐ திரும்பப் பெற்றுக்கொண்டது. அதேபோல, உச்ச நீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களைத் தந்ததாக அனுராக் தாக்குர் மீது தொடர்ந்த மனுவையும் என். சீனிவாசன் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai