Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இரண்டாவது டி-20 கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி- Dinamani

சுடச்சுட

  

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இரண்டாவது டி-20 கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

  By கட்டாக்,  |   Published on : 05th October 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  23

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, கட்டாக்கில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
   இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
   இந்நிலையில் இரண்டாவது போட்டி ஒடிஸா மாநிலம் கட்டாக் நகரில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தொடரை தக்கவைக்க இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
   இரு அணியினரும் தீவிரம்: தர்மசாலாவில் பனிப் பொழிவு காரணமாக பந்து வீச்சாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்டாக்கில் இந்த பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 3-ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி நடைபெறவுள்ள கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. போட்டி நாளான வரும் வியாழக்கிழமை அங்கு 80 சதவீதம் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் அன்றைய போட்டியில் எத்தகைய மாற்றமும் நிகழலாம். எனவே, அதற்கு முன்னதாக கட்டாக்கில் நடைபெறும் போட்டியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள இரு அணியினரும் தீவிரமாக உள்ளனர்.
   முதல் போட்டியைப் பொருத்த வரை இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய அளவில் குறைகள் எதுவும் சொல்ல இயலாது. இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித் சர்மா - விராட் கோலி ஜோடி, 72 பந்துகளில் 138 ரன்கள் திரட்டிக் கொடுத்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 220 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் ரன்ரேட் மந்தமானது. இருப்பினும் எதிரணிக்கு கடினமான இலக்கைதான் இந்தியா நிர்ணயித்திருந்தது. ரன்-அவுட்டாகி வெளியேறிய ராயுடுவுக்குப் பதிலாக ரஹானேவை களமிறங்கும் அணியில் சேர்த்திருக்கலாம் என்ற கருத்தே பேட்டிங் பகுதியில் வைக்கப்படும் ஒரே விமர்சனமாக உள்ளது.
   அபாயகரமான பேட்ஸ்மேன்: பந்துவீச்சில் இந்தியா, தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய சூழலில் உள்ளது. அஸ்வின் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையை மெருகேற்ற வேண்டியுள்ளது. 16-ஆவது ஓவரில் அக்ஷர் படேல் 22 ரன்களை வாரி இறைத்தார். அக்ஷர் படேலுக்குப் பதிலாக, அமித் மிஸ்ராவுக்கு தோனி வாய்ப்பளித்திருக்கலாம்.
   தென் ஆப்பிரிக்க அணியை பொருத்தவரை உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் டி வில்லியர்ஸýம், ஹஷிம் ஆம்லாவும் அந்த அணிக்கு மிகச் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
   நடுவில் டுபிளெஸ்ஸில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ஜே.பி.டுமினி - ஃபர்ஹான் பெஹர்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் டி-20 தொடரை கைப்பற்றி விடும். அதற்கு இந்திய வீரர்கள் அவ்வளவு எளிதில் இடம்
   தந்துவிடமாட்டார்கள் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை. போட்டியை முன்னிட்டு போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
   இரு அணி வீரர்கள்
  இந்தியா
   மகேந்திர சிங் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, ஸ்ரீநாத் அரவிந்த், அஜிங்கியா ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா.
   தென் ஆப்பிரிக்கா
   ஃபாப் டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, ஃபர்ஹான் பெஹர்டியன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரீஸ், ககிசோ ரபடா, கைல் அபோட், மர்சென்ட் டி லங்கி, இம்ரான் தாஹிர், குவின்டன் டி காக், எட்டி லீ, அல்பி மோர்கெல், கயா ஜோண்டோ.
   நேரம் : இரவு 7 மணி, நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai