சுடச்சுட

    
    25

    சென்னையின் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர வீரர் ஹெல்டர் போஸ்டிகாவை அந்த அணியின் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.
     கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஐஎஸ்எல் தொடரின் முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
     இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் முன்னணி (மார்க்கியூ) வீரரான ஹெல்டர் போஸ்டிகா (போர்ச்சுகல்) அந்த அணிக்கு 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     வீரர்கள் சமமானவர்கள்: போஸ்டிகா மிகவும் கடினமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஈரப்பதத்துடன் காணப்பட்ட மைதானத்தை துணிச்சலுடன் அவர் எதிர்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக போஸ்டிகாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
     எங்கள் அணியினர் 3 கோல்கள் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது கடினமானது. எங்கள் வீரர்களின் திறமை எனக்கு திருப்தியளிக்கிறது என்றார் அவர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai