சுடச்சுட

    

    மாநில மெகா வாலிபால் போட்டி: ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். அணிகள் முதலிடம்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 05th October 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில வாலிபால் போட்டியில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்றன.
     தமிழ்நாடு மாநில வாலிபால் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா வாலிபால் போட்டிகள், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அக்.1ஆம் தேதி தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்றன.
     பரிசளிப்பு விழா, கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வாலிபால் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.துரைசிங் முன்னிலை வகித்தார். தலைமையிட செயலாளர் டி.பொன்னியின் செல்வன் வரவேற்றார்.
     முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், மகளிர் பிரிவில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை எத்திராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. முதலிடம் பெற்ற ஜேப்பியார் அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் கல்வி வள்ளல் தி.கலசலிங்கம் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற எத்திராஜ் கல்லூரி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தங்கவேல் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு மற்றும் டாக்டர் கலைச்செல்வி இளங்கோவன் கோப்பை வழங்கப்பட்டது.
     ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரி அணியை வென்று, ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் சிவந்தி ஆதித்தனார் கோப்பையை வென்றது. இரண்டாமிடம் பெற்ற புனித ஜோசப் பொறியியல் கல்லூரி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு மற்றும் டாக்டர் போஸ் கோப்பை வழங்கப்பட்டது.
     மூன்றாமிடம் பிடித்த பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு மற்றும் நடிகர் குமரன் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், பல்கலைக்கழக இயக்குநர் எஸ்.சசிஆனந்த், தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத் துணைத் தலைவர் பி.பாலசந்தர், சினிமா நடிகர் குமரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பி.செல்வகணேஷ் நன்றி கூறினார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai