சுடச்சுட

  
  24

  உஹான் ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் உள்ளார்.
   உஹான் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இதன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் மோதினர்.
   முதல் செட்டை வீனஸ் கைப்பற்ற, ஆட்டத்தின் 53-ஆவது நிமிடத்தில் முகுருஸா திடீரென போட்டியிலிருந்து விலகினார். இதனால், வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை கைபற்றினார்.
   35 வயதான வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ் அரங்கில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவரைப் போலவே இவரது சகோதரி செரீனா வில்லியம்ஸும் நட்சத்திர வீராங்கனையாக திகழ்கிறார். வெற்றிக் களிப்பில் திளைத்திருக்கும் வீனஸ் வில்லியம்ஸ், விரைவில் தொடங்கவிருக்கும் சீன ஓபன் போட்டிக்காக பெய்ஜிங்கிற்கு பயணப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெறவுள்ள டபிள்யூ.டி.ஏ போட்டிக்கும் தகுதி பெறும் முனைப்பில் உள்ளார்.
   வில்லியம்ஸின் இலக்கு:டென்னிஸ் வாழ்க்கையில் தனது 47-ஆவது சாம்பியன் மகுடத்தை கைப்பற்றிய உற்சாகத்தில் வீனஸ் கூறுகையில், "நான் இன்னும் விளையாட விரும்புகிறேன். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். முடிந்த மட்டில் 100 சதவீதம் உடற்தகுதியை தக்கவைத்துக் கொள்வேன். அதுவே எனது இலக்கு' என்றார்.
   வீனஸ் வில்லியம்ஸின் பேட்டியைப் பார்க்கும்போது அவர், தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கும் முனைப்பில் இருப்பது தெள்ளத் தெளிவு.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai