சுடச்சுட

  

  சர்வதேச குத்துச் சண்டை போட்டி தோஹாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
   கத்தார், தலைநகர் தோஹாவில் சர்வதேச குத்துச் சண்டை போட்டிகள் செவ்வாய்க்கிழமை (அக்.6) முதல் தொடங்குகின்றன. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 73 நாடுகளைச் சேர்ந்த 260 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியின் மூலம் 23 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கொண்டது.
   இந்தியாவிலிருந்து எல்.தேவேந்திரோ சிங் (49 கிலோ எடைப்பிரிவு), மதன் லால் (52 கிலோ), ஷிவ தாபா (56 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணண் (75 கிலோ) மற்றும் சதீஷ் குமார் (+91 கிலோ) ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி குறித்து இந்திய குத்துச் சண்டை பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், "இந்திய வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
   இது மிகவும் கடினமான போட்டியாகும். இருப்பினும் இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
   இதற்கு முன்னர் நடந்த போட்டியில் சிறப்பான முடிவுகளை தந்துள்ள அவர்கள், அதே போன்ற முடிவுகள் இந்த முறையும் தொடரும்' என்றார்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai