சுடச்சுட

    

    சிறுமிக்கு சித்திரவதை: சரணடைந்தார் சஹாதத் ஹூசைன்; சிறையில் அடைக்க உத்தரவு

    By  டாக்கா,  |   Published on : 06th October 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    சிறுமியை சித்திரவதை செய்த வழக்கில் டாக்கா போலீஸாரால் தேடப்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹுசைன் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
     வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த மாதம் 6-ஆம் தேதி அன்று, உடலில் காயங்களுடன் சிறுமி ஒருவரை போலீஸார் மீட்டனர். அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர், வங்கதேச கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹுசைன் வீட்டில் பணிபுரிந்தபோது சஹாதத்தும் அவரது மனைவி ரீட்டோவும் தன்னை சித்ரவதை செய்ததாக தெரிவித்தார்.
     இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், சஹாதத், ரீட்டோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக இந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பதற்காக, தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை காணவில்லை என்று சஹாதத்தும் போலீஸில் புகார் அளித்திருந்தார். ஆனால், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர்.
     சரணடைந்தார்: இதனை அறிந்த, சஹாதத், ரீட்டோ தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையே, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சஹாதத் ஹுசைனை அனைத்துவித கிரிக்கெட் போட்டியிலிருந்தும் தாற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.
     சஹாதத், அவரது மனைவி இருவரையும் சுமார் ஒருமாத காலமாக போலீஸார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரீட்டாவை அவரது பெற்றோரின் இல்லத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை சஹாதத்தும் டாக்கா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சஹாதத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai