சுடச்சுட

    

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கோப்பையை வென்றது பாகிஸ்தான்

    By  ஹராரே,  |   Published on : 06th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
     ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதன் முதல் போட்டியில் 131 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
     இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
     இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்தது. இதன் பிறகு ஆடிய ஜிம்பாப்வே அணி, பிலால் ஆசிஃபின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 161 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ஆசிஃப், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
     எளிதான இலக்கை நோக்கி தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஷாத் சஃபீக் (38 ரன்கள்), சோயிப் மாலிக் (34 ரன்கள்) ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
     இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai