சுடச்சுட

    

    மாநில அளவிலான கோ- கோ போட்டி: சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் சாம்பியன்

    By மண்ணச்சநல்லூர்,  |   Published on : 06th October 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    திருச்சி மாவட்டம் கூத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
     கூத்தூரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயாவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் கடந்த 3ஆம் தேதி தொடங்கின.
     போட்டிகளில் சென்னை, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பள்ளிகளிலிருந்து 48 ஆண்கள் அணிகளும் 36 பெண்கள் அணிகளும் பங்கேற்றன.
     இறுதிப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் சேலம் அயோத்தியாபட்டினம் ராமலிங்கபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி வெற்றி பெற்றது. சேலம் மெய்யனூர் ஸ்ரீ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
     பெண்கள் பிரிவில் சேலம் அயோத்தியாபட்டினம் ராமலிங்கபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடமும் திருச்சி கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா இரண்டாம் இடமும் பெற்றன.
     பரிசளிப்பு விழாவுக்கு கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் கல்விக் குழுமங்களின் தலைவர் வி. கோபிநாதன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். விழாவில், விக்னேஷ் கல்விக் குழும இயக்குநர் ஆர். வரதராஜன், விக்னேஷ் வித்யாலயா முதல்வர் பத்மா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai