சுடச்சுட

  

  மைதானத்தில் பாட்டில்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்? ஒடிஷா கிரிக்கெட் சங்கம் விளக்கம்

  By DN  |   Published on : 06th October 2015 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நேற்றைய டி20 போட்டியின்போது மைதானத்தில் பாட்டில்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து ஒடிஷா கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

  தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகும் ரசிகர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்கள். ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

  பொதுவாக இந்திய மைதானங்களில் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் கட்டாக் மைதானத்தில் மட்டும் அதற்கு ஏன் அனுமதி தரப்பட்டது என்று கேள்வி எழுந்தது. இதற்கு ஒடிஷா கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செயலாளர் அசிர்பாத் பெஹாரா கூறும்போது:

  வெயிலினால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்கவே ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் கொண்டுவர அனுமதிக்கப்பட்டனர். இல்லாவிட்டால் அவர்கள் மூன்று மாடி கீழே இறங்கி தண்ணீர் அருந்தவேண்டும். ஆனால் சிலர் அந்தத் தண்ணீர் பாட்டில்களைத் தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள். இனிமேல் ரசிகர்களின் நலனுக்காக எந்தவொரு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க யோசிப்போம். இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai