சுடச்சுட

  

  ரசிகர்கள் ரகளை: கட்டாக் காவல்துறை மீது கவாஸ்கர் குற்றச்சாட்டு!

  By DN  |   Published on : 06th October 2015 03:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டபோது காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மேட்சை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

  இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் மைதானத்தில் அமர்ந்தனர். அந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபடவே 13 ஓவர்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

  ரசிகர்களின் ரகளைக்கு கிரிக்கெட் உலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி கட்டாக்கில் கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி பிசிசிஐ யோசிக்கவேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து சுனில் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

  அடுத்தமுறை கட்டாக்கில் போட்டி நடத்துவதாக இருந்தால் அந்தப் போட்டியை கட்டாக்குக்கு அளிக்கக்கூடாது. ஒரிஸா கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்படும் தொகையும் நிறுத்தப்படவேண்டும்.

  ரசிகர்கள் ரகளை செய்தபோது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மேட்சைத்தான் வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் ரசிகர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்திருக்கவேண்டும்.

  இந்திய அணி நன்றாக ஆடும்போது ரசிகர்கள் மதிப்புமிக்க எதையாவது எறிகிறார்களா? பிறகு ஏன் அணி மோசமாக ஆடும்போது மட்டும் குப்பைகளை வீசுகிறார்கள்? என்று பேட்டியளித்துள்ளார்.

  அடுத்த டி20 போட்டி வியாழன் அன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai