Enable Javscript for better performance
ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார்.
     கரோல் வேமுல்லர் ஓபன் ஸ்குவாஷ்போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, நியூஸிலாந்தின் ஜோலி கிங்கை எதிர்கொண்டார். "வில்டு கார்டு' மூலம் பிரதானச் சுற்றுக்கு முன்னேறிய ஜோலி, ஜோஷ்னாவை 11-4, 9-11, 11-4, 11-8 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஜோஷ்னா, தகுதிச் சுற்றின் மூலம் பிரதான சுற்று வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai