சுடச்சுட

    

    அமெரிக்காவில் சச்சின் - வார்னே அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள்!

    By DN  |   Published on : 07th October 2015 06:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sachin_warne

    அமெரிக்காவில் நடைபெறும் 3 டி20 போட்டிகளில் சச்சின், வார்னே போன்ற பிரபல முன்னாள் வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    பிரத்யேகமாக ஒரு டி-20 தொடரை நடத்த முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே ஆகியோர் முன்வந்துள்ளார்கள். அதன்படி, கிரிக்கெட் பிரபலமில்லாத அமெரிக்காவில் 3 டி 20 போட்டிகள் நடக்க உள்ளன. நவம்பர் 7, 11, 14 ஆகிய தேதிகளில் இப்போட்டிகள் நடக்கின்றன.

    சச்சின், வார்னே அணிகளுக்கு சச்சின் பிளாஸ்டர்ஸ் மற்றும் வார்னேஸ் வாரியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன. இவர்கள் இருவரைத் தவிர லாரா, அக்ரம் என 26 முன்னாள் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். சச்சின், கங்குலி, லட்சுமணன், அகர்கர் ஆகிய இந்திய வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    இந்தப் போட்டி பற்றி வார்னே கூறும்போது: அமெரிக்காவில் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சி இது. இந்தப் போட்டியைப் பார்க்க அமெரிக்க மக்களும் வந்தால் அவர்கள் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காண்பிப்பார்கள் என்றார். சச்சின் கூறும்போது, அமெரிக்க மக்கள் பேஸ்பால் பேட்டுக்குப் பதிலாக கிரிக்கெட் பேட்டை எடுத்தால் தான் எங்களுடைய முயற்சி வெற்றி என்று அர்த்தம் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai