சுடச்சுட

    

    உலக குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷண், ஷிவ தாபா ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
     உலக குத்துச் சண்டை போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரரும், ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான விகாஸ் கிருஷண், ஹங்கேரியின் ஜோல்டன் ஹர்க்சாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-ஆவது சுற்றில் அவர், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள தாமஸ் ஜப்லான்ஸ்கியை எதிர்கொள்கிறார்.
     ஆடவர் 56 கிலோ பிரிவில் இந்தியாவின் ஷிவ தாபா, அல்ஜீரியாவின் கலீல் லிதிமை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். அவர், தனது 3-ஆவது சுற்றில் மொராக்கோவின் முகமது ஹாமௌத்துடன் மோதுகிறார். 64 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மனோஜ் குமார், 1-2 என்ற புள்ளிகள் கணக்கில் மொரோகோவின் அப்டெல்ஹாக் அடாகினியிடம் தோல்வியைத் தழுவினார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai