சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து : வெற்றிக் கணக்கைத் தொடங்கியது கேரளம்

    By  கொச்சி,  |   Published on : 07th October 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கியது கேரள பிளாஸ்டர்ஸ் அணி.
     கொச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி, வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதின.
     வீணான வாய்ப்புகள்: இந்தத் தொடரில் இரு அணிகளும் புதிய பயிற்சியாளரின் கீழ் களமிறங்கியுள்ளன. முதல் பாதியில் கோல் வாய்ப்புகள் கிடைத்தாலும் இரு அணிகளும் அவற்றைத் தவறவிட்டன.
     7-ஆவது நிமிடத்தில் யுனைட்டெட் அணியின் கோல் கீப்பர் ரெஹனேஸ் கோல் கம்பத்தை விட்டு வெளியே வந்தார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கோல் அடிக்கத் தவறினார் கேரள வீரர் ரஃபி. 12 ஆவது நிமிடத்தில் கேரள அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இடது ஓரத்தில் இருந்து சி.கே.வினீத் அழகாக கொடுத்த பாûஸ ராகுல் பெகி கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். ஆனால் பந்து விலகிச் சென்றது.
     இந்த ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டையை யுனைட்டெட் அணியின் ஷியாம் ஹங்கல் பெற்றார். முரட்டுத்தனமாக விளையாடியதால் நடுவர் அவருக்கு 22-ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரித்தார். அடுத்த நிமிடத்தில் கேரள அணிக்கு "ப்ரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதனையும் அவர்கள் தவறவிட்டனர். இதேபோல 34-ஆவது நிமிடத்தில் கிடைத்த "ப்ரீ கிக்' வாய்ப்பை யுனைட்டெட் அணி வீரர்கள் வீணடித்தனர். முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்காமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன.
     கேரளம் வெற்றி: இரண்டாவது பாதியில் கேரள அணி மளமளவென 3 கோல்கள் போட்டது. 49-ஆவது நிமிடத்தில் ஜோசு கர்ரெய்ஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து, 68-ஆவது நிமிடத்தில் ராகுல் பெகி நீண்டதூரத்தில் இருந்து எறிந்த பந்தை ரஃபி தலையால் முட்ட, அது நேரே கோல் வலைக்குள் புகுந்தது.
     72-ஆவது நிமிடத்தில் சான்செக் வாட் அபாரமாக ஒரு கோல் அடிக்க கேரள அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. 82-ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் வீலிஸ் அடித்த கோல் வடகிழக்கு யுனைட்டெட் அணிக்கு ஆறுதலாக இருந்தது.
     அதன் பின்னர் இரு அணிகளும் கூடுதல் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற்றது.
     இன்றைய ஆட்டம்
     எஃப்சி கோவா
     அட்லெடிகோ டி கொல்கத்தா
     நேரம் : இரவு 7 மணி, இடம்: கோவா
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai