சுடச்சுட

  

  கட்டக் மைதானத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும்

  By  புது தில்லி,  |   Published on : 07th October 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  22

  கட்டக் மைதானத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுநீல் காவஸ்கர் வலியுறுத்தினார்.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த திங்கள்கிழமை அன்று ஒடிஸா மாநிலம் கட்டக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தபோது, தண்ணீர் பாட்டில்களை வீசியெறிந்து ரசிகர்கள் ரகளை செய்தனர். இதனால், போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
   இந்த சம்பவம் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுநீல் காவஸ்கர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
   பிரச்னையின்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸார், ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடவில்லை. பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருக்கும் போலீஸார் கிரிக்கெட் ஆட்டத்தை பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. ரசிகர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.
   தடை விதிக்க வேண்டும்: அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த
   கட்டக் மைதானத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஒடிஸா கிரிக்கெட் சங்கத்துக்கு நிதி அளிப்பதை பிசிசிஐ நிறுத்த வேண்டும். தோல்வியடைந்தால் பாட்டில் வீசுபவர்கள், அணி வெற்றி பெற்றால் தங்களது விலைமதிப்புமிக்க பொருட்களை மைதானத்துக்குள் வீச தயாராக இருக்கிறார்களா? இந்திய வீரர்கள் சிறந்த நிலையை பெற பாடுபடவேண்டும்.
   அக்ஷர் படேல் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் அமித் மிஸ்ராவுக்கு தோனி வாய்ப்பளித்திருக்கலாம். சர்வதேச போட்டியில் அக்ஷர் முன்கூட்டியே நுழைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன் என்றார்.
   பெரிதுபடுத்த வேண்டாம்: இந்நிலையில் ரசிகர்களின் நடவடிக்கை குறித்து தோனி கூறுகையில், "இந்த விஷயத்தை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை. விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு போட்டியில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்ற போதிலும் இதேபோன்று பாட்டில்கள் வீசப்பட்டது எனக்கு ஞாபகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சில பாட்டில்கள் வீசப்பட்டன. பின்னர் கேளிக்கைக்காகவே பார்வையாளர்கள் பாட்டில்களை வீசினர்' என்றார்.
   ரசிகர்களின் விரும்பத்தகாத இந்த செயலுக்கு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், முகமது கைஃப் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai