கபடியில் தங்கம்: தமிழக வீரருக்கு பரிசு
By சென்னை, | Published on : 07th October 2015 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் ராஜகுருவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வடுவூர் தென்பாதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் பெங்களூரில் அரசு வங்கிப் பணியில் உள்ளார். கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் கபடி அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணி தங்கப் பதக்கம் வென்றது.
பதக்கம் வெல்பவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில், ராஜகுரு பெங்களூரில் இருந்தாலும், அவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரம்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், ஆதார் அட்டையில் தனது சொந்த ஊரான மன்னார்குடி தாலுகாவைக் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டு அரசின் விதியை தளர்த்தி, சிறப்பினமாக அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி அரசு உத்தரவிடுவதாக விளையாட்டு-இளைஞர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.