சுடச்சுட

    

    டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி

    By புது தில்லி,  |   Published on : 07th October 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
     நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னதாக நியூஸிலாந்து "ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
     இந்நிலையில் நியூஸிலாந்தின் பிரதான அணியுடனான முதல் போட்டி நெல்சனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆட்டத்தை தொடங்கின. 5-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்துக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நிக் ஹெய்க் அபாரமாக செயல்பட்டு கோலாக்கினார்.
     இதன் பிறகு தாக்குதல் ஆட்டத்தில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டது.
     இதில், கோல் கம்பத்தை நோக்கி நிகில் திம்மையா அடித்த பந்தை நியூஸிலாந்து அணியின் தடுப்பாட்டக்காரர்கள் தடுத்தனர்.
     நியூஸிலாந்து வெற்றி: முதல் பாதி முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நியூஸிலாந்து அணி, 27-ஆவது நிமிடத்தில் கூடுதலாக ஒரு கோல் போட்டது. ஜார்டு பன்சியா இந்த கோலை அடித்தார். எதிரணிக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் கடுமையாக முயன்றனர்.
     இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் தடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடியதால் மேற்கொண்டு கோல்கள் எதுவும் விழவில்லை. இதனால், ஆட்டநேர இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
     இரண்டாவது போட்டி, இதே மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai