Enable Javscript for better performance
போதுமான அளவில் ரன் குவிக்கத் தவறிவிட்டோம்- Dinamani

சுடச்சுட

    
    23

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி-20 போட்டியில் போதுமான அளவில் ரன் குவிக்கத் தவறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
     தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி கட்டக்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு சுருண்டது.
     எளிதான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தபோது, 11-ஆவது ஓவரின் முடிவில் ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்து ரகளை செய்தனர். இதனால், ஆட்டம் சுமார் 45 நிமிடம் தடைபட்டது.
     தென் ஆப்பிரிக்கா வெற்றி: அதன் பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் 17.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
     போட்டிக்குப் பின்னர் இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:
     டி-20 போட்டியில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது 120 ரன்களுக்குள் இந்திய அணி ஆட்டமிழந்துவிடுகிறது. ஒருவேளை இந்த முடிவு காரணமாக அடுத்த போட்டியை நெருக்கடி இன்றி நாங்கள் விளையாட முடியும். டி-20 போட்டியில் எனது சிந்தனையை அதிகம் செலவழிப்பதாக உணர்கிறேன். இயல்பான எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
     ஆரம்பத்தில் சிறிது நேரம் அதுபோன்று விளையாடினேன். என்ன நடந்தாலும் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் டி-20 போட்டியில் அவ்வாறு விளையாடியாக வேண்டும்.
     தடுமாறுகிறார்கள்: பெரும்பாலான நேரங்களில் 16 அல்லது 17-ஆவது ஓவரில்தான் எனக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒருவேளை விக்கெட்டுகள் வேகமாக விழுந்துவிட்டால் முன்கூட்டியே களமிறங்குகிறேன்.
     பேட்டிங்கில் 6-ஆவது வரிசை மிக முக்கியமானதாகும். அந்த இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் யார் என்பதை சொல்ல இயலாது. முன் வரிசையில் களமிறங்குபவர்கள் கூட 6-ஆவது இடத்தில் விளையாடும்போது தடுமாறுகிறார்கள். அதனால் தான் அந்த இடத்தில் நான் களமிறங்குகிறேன்.
     முதல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இரண்டாவது போட்டியில் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது மற்றும் போதுமான ரன்களை எடுக்கத் தவறியது ஆகியவை எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. "டி-20' அதிக ரன்குவிக்கக் கூடிய போட்டி அல்ல. 140 முதல் 150 ரன்கள் என்பது சிறந்த போட்டியை ஏற்படுத்தும் ஸ்கோர் ஆகும் என்றார்.
     பெரிய சாதனை: தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், "இந்த ஆட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்தியதே டி-20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சு என்று நினைக்கிறேன். அனைத்து பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசியது வியக்கத்தக்கதாக இருந்தது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது பெரிய சாதனையாகும். இதற்காக பெருமைப்படுகிறோம்' என்றார்.
     இவ்விரு அணிகளிடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai