Enable Javscript for better performance
முதல் போட்டிக்காக காத்திருக்கிறேன்- Dinamani

சுடச்சுட

    
    24

    தொழில் முறை குத்துச்சண்டை முதல் போட்டிக்காக காத்திருக்கிறேன் என்று இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
     அமெச்சூர் போட்டிகளில் பங்கேற்று வந்த இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் வரும் 10-ஆம் தேதி அன்று தனது முதல் தொழில் முறை போட்டியில் பங்கேற்க உள்ளார்.
     இப்போட்டியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து விஜேந்தர் மேலும் கூறியதாவது:
     தொழில் முறை குத்துச்சண்டை வீரராக உருவெடுக்கப்போவது எனது வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஆகும். முதல் போட்டியில் பங்கேற்கும் நாளுக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன். இங்குள்ள உடற்பயிற்சி மையத்தில் லீ பியர்ட், ஹாரூன் ஹெட்லே போன்ற பயிற்சியாளர்களுடன் ஒரு மாதத்துக்கு மேல் செலவிட்டிருக்கிறேன்.
     கஷ்டங்களை விரும்புபவன்:தொழில் முறை குத்துச் சண்டை பயிற்சி மிகவும் கடினமானதாகும். ஆனால், வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களை நான் விரும்புவதால் அது பெரிதாக தெரியவில்லை. முன்னர் அமெச்சூர் குத்துச்சண்டை வீரராக இருந்தேன். தற்போது தொழில்முறை குத்துச் சண்டை வீரர். எல்லாம் மெதுவாகத்தான் மாற்றமடைந்துள்ளன. ஆனால், நான் கடினமாக முயற்சி செய்திருக்கிறேன். எனவே, என்னால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்.
     நான் பின் தொடரும் ஜாசன், ஆன்ட்ரென், ஜாக் போன்ற பயிற்சியாளர்களிடம் புதிய வியூகங்களை கற்றுள்ளேன். மான்செஸ்டரில் உள்ள இந்தியர்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
     என்னுடைய முதல் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியை அவர்கள் பார்வையிட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர். இங்குள்ள ஏராளமான இந்தியர்கள் நேரில் வந்து என்னை ஊக்கப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai