Enable Javscript for better performance
ரசிகர்கள் ரகளை: அறிக்கை சமர்ப்பிக்க பிசிசிஐ தலைவர் கட்டளை!- Dinamani

சுடச்சுட

    

    ரசிகர்கள் ரகளை: அறிக்கை சமர்ப்பிக்க பிசிசிஐ தலைவர் கட்டளை!

    By DN  |   Published on : 07th October 2015 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாக் டி20 போட்டியின்போது ரசிகர்கள் ரகளை செய்தது குறித்து 2 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் கட்டளையிட்டுள்ளார்.

    தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகும் ரசிகர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்கள். ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

    பொதுவாக இந்திய மைதானங்களில் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் கட்டாக் மைதானத்தில் மட்டும் அதற்கு ஏன் அனுமதி தரப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் கட்டாக் டி20 போட்டியின்போது ரசிகர்கள் ரகளை செய்தது குறித்து 2 நாள்களுக்குள் ஒடிஷா கிரிக்கெட் சங்கம் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் கட்டளையிட்டுள்ளார். ஐசிசி விதிமுறைகளுக்கு எதிராக கட்டாக் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி தரப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai