சுடச்சுட

    
    22

    தைவான் கோப்பை சைக்கிள் போட்டியில் ஒரு தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்று இந்திய சைக்கிள் வீராங்கனை டெபோரா சாதனைப் படைத்தார்.
     20 வயதான டெபோரா, மகளிர் எலைட் பிரிவில் ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
     மகளிர் எலைட் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனையை முந்தி அவர், முதல் தங்கத்தை கைப்பற்றினார்.
     கெய்ரின் பிரிவில் டெபோரா, மற்றொரு தங்கம் வெல்லும் வாய்ப்பு நூலிழையில் நழுவியது.
     பாங்காக்கில் அக்.9 முதல் 11 வரை நடைபெறவுள்ள யுசிஐ போட்டி, தில்லியில் வரும் நவம்பர் 18-20 வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டி ஆகியவற்றிலும் டெபோரா பங்கேற்கவுள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai