சுடச்சுட

  

  உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

  Published on : 08th October 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில், கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் துர்க்மேனிஸ்தான் அணியை இந்தியா வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
   ரஷியாவில் வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுல்ளது. இதில் போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெறும். எஞ்சியுள்ள 31 நாடுகள் தகுதிச் சுற்றின் மூலம் பிரதானச் சுற்று வாய்ப்பைப் பெறும்.
   இந்த தகுதிச் சுற்றில், ஆசிய கண்டத்தில் மொத்தம் 40 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
   இவற்றில் இந்திய அணி, ஓமன், ஈரான், துர்க்மேனிஸ்தான், குவாம் ஆகிய அணிகளுடன் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
   வெற்றி நெருக்கடி: இதற்கு முந்தைய 3 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், துர்க்மேனிஸ்தான் அணியுடன் இந்திய அணி வியாழக்கிழமை மோதுகிறது.
   இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும். சர்வதேச தரவரிசையில் இந்திய அணி 167-ஆவது இடத்தில் உள்ளது. துர்க்மேனிஸ்தான் அணியோ 155-ஆவது இடம் வகிக்கிறது.
   இந்தியன் சூப்பர் லீக் தொடங்கியுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்ட அணிகளிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தான் விடுவிக்கப்பட்டார்கள்.
   அதன் பின்னர் 16 மணிநேர பயணத்திற்குப் பிறகு அவர்கள் கடந்த திங்கள்கிழமை துர்க்மேனிஸ்தான் சென்றடைந்தனர்.
   ஆச்சரியம்: கடந்த ஜூன் மாதத்தில் நடந்த போட்டியில் துர்க்மேனிஸ்தான் அணி, வலுவான ஈரான் அணியை அதன் சொந்த மண்ணில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
   இந்திய அணி கடந்த மாதம் 8-ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் 1-2 என்ற கணக்கில் ஈரானிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.
   முந்தைய ஆட்டத்தின்போது ஈரான் அணியின் பயிற்சியாளர் கர்லாஸ் கூறுகையில், "இந்திய வீரர்களின் ஆட்டத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. திடீரென அவர்கள் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறார்கள்' என்று கூறியிருந்தார். இதனால், துர்க்மேனிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆச்சரியத்தை நிகழ்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
   
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai